/* */

கோவை: தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டு வழங்கிய தம்பதியினர்

கோவையில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகளை வழங்கிய தம்பதிகளின் செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

HIGHLIGHTS

கோவை: தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டு வழங்கிய தம்பதியினர்
X

பைல் படம்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதி-ஸ்ரீஜா என்ற ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர் இருவரும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகின்றனர்.வழக்கமாக திருமண வைபவங்களில் வாழ்த்த வருபவர்களுக்கு தாம்பூல பை வழங்கி அதில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து அதனுடன் சேர்த்து சிறு பாத்திரங்கள் வழங்குவதும் வாடிக்கை.

ஆனால் இவர்களது திருமணத்தில் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் உறவினரான கவிதா என்பவர் பழநி பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி என்பதால் அவரது ஆலோசனையின் படி வழக்கம்போல் வழங்கப்படும் தாம்பூல பைக்கு பதிலாக இந்த சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டதாக மணமக்கள் தெரிவித்தனர்.

இதில் கருப்பு கவுனி லட்டு, திணை லட்டு, பாசிபயிறு லட்டு, கேழ்வரகு லட்டு, நரிப்பயிறு லட்டு, கம்பு லட்டு, கடலை உருண்டை என ஏழு வகை சிறுதானிய லட்டுகள் இடம் பெற்றுள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறுதானிய ஆண்டை குறிப்பிடும் விதமாகவும் ஆரோக்கியதை பேணும் வகையிலும் இந்த திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுகள் வழங்கப்பட்டதாகவும் திருமண வீட்டார் தெரிவித்தனர். இவர்களது இந்த முயற்சி திருமணத்திற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Updated On: 26 March 2023 8:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு