இரண்டாவது நாளாக தொடரும் கோவைமாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேரும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, 2,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். .
ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த ரூ.721 சம்பள உயர்வை வழங்க கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று காலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோவை அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அடுத்து, அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரவில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்க தலைவர் தமிழ்நாடு செல்வம், தூய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை மீட்டெ டுக்கும் சங்கங்களின் கூட்ட மைப்பின் தலைவர் வினோத் தலைமை தாங்கினர்.
போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியா ளர்கள் தங்களது கோரிக் கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக மாற்ற கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பள உயர்வு கேட்டோம். ஆட்சியர் ரூ.721 சம்பளம் நிர்ண யித்தார். அதை இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை.
எனவே நேற்று முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். நேற்று அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்று இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொட ரும் என்று தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக வ.உ.சி.மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் மாநகரில் குப்பைகள் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இருந்தபோதிலும் மாநகராட்சி நிர்வாகத்தினர், நிரந்தர தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகள் தேங்காதவாறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu