ஸ்மார்ட் சிட்டி பணிகள் - கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி பணிகள் - கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடம் குளத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 62.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உக்கடம் பெரிய குளம் புனரமைக்கப்பட்டது. இதேபோல 31.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செல்வசிந்தாமணி குளமும், 67.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாங்குளமும் புனரமைக்கப்பட்டன.

இக்குளங்களில் நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, சூரிய மின்சக்தி கூரைகளுடன் கூடிய இருக்கைகள், விளையாட்டுத்திடல், படகுத்துறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குளங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆணையாளர் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் மாதிரிகளை சோதனை செய்யும் களப்பணியாளர்களிடம் நேரடி செயல் விளக்கத்தை கேட்டறிந்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்