கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

டாடாபாத் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த போது எடுத்த படம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டாடாபாத் 6 வது வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அவர் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அந்த மண்டலத்தில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் மாதிரிகளை சேகரிக்கும் களப்பணியாளர்களுக்கு குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil