கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. மாநகர் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.
கோவை போத்தனூர், உக்கடம்,ரயில்நிலையம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால்,காந்திரபுரம்,இடையர்பாளையம் கணுவாய் பீளமேடு கவுண்டம்பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையம் துடியலூர் வடவள்ளி உள்ளிட்ட மாநகரம் மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்தது.
கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் அளவு அதிகரித்து வந்தது இந்நிலையில் பொது மக்கள் மதிய நேரங்களில் யாரும் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ் நிலை ஏற்பட்டது.இந்த மழையினால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தின் அளவு கோவை சுற்று புறத்தில் சற்று குறைந்து உள்ளது.
மேலும் சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. குறிப்பாக பொள்ளாச்சி மெயின் ரோடு குறிச்சி சாலையில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வானிலை ஆய்வின்படி நாளையும் மழை இருக்கும் என்ற தகவலை வைத்து அரசு வடிகால் வசதிகளை தயார்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu