குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் சிக்கிய வாகனங்கள்

குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில்  சிக்கிய வாகனங்கள்

குழியில் சிக்கிய வாகனங்கள்.

சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக சாலையில் பழைய குழாய்களை மாற்றி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, ரயில் நிலையம் வரையிலான சாலை ஸ்டேட் பேங்க் சாலை என்றழைக்கப்படுகிறது. தற்போது கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சூயஸ் நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக இச்சாலையில் பழைய குழாய்களை மாற்றி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த வாரம் முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதையாக இச்சாலை மாற்றப்பட்டுள்ள போதும், கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகங்கள் மற்றும் கடைகளுக்கு வருவோர், இச்சாலையை வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சோதனை முயற்சியாக தண்ணீர் திறக்கப்பட்ட போது, அது குழாயிலிருந்து வெளியேறியது. இதனால் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் மண் இளகி, உள்வாங்கியது. அப்போது அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் ஒரு காரின் சக்கரங்கள் குழியில் இறங்கியது. ஆட்டோவை அங்கிருந்தவர்கள் இணைந்து மீட்டபோதும், காரை மீட்க முடியாததால் குழாய் பதிக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி இயந்திரம் மூலம் கார் கயிறு கட்டி மீட்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, வாகன நெரிசலும் ஏற்பட்டது. இச்சாலையில் பயணிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளதோடு, காவலர்களும் போக்குவரத்து மாற்றும் பணியில் ஈடுபட்டு வரும் போதும், பலரும் சாலையில் வாகனங்களை நிறுத்தியதால் இது போன்ற சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Tags

Next Story