மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்பு பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்பு பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, உலக கை கழுவும் தினம் அக்டோபர் 13ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிகழ்வை கோவையில் தொடங்கி வைத்தாகவும், பின்னர் சற்றே குறைப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாகவும் உப்பு, சக்கரை, எண்ணை உணவில் குறைக்கும் விழிப்புணர்வு, மற்றும் உபரி உணவுகளை வீணக்கமால் உபயோகம் படுத்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றார். திருமணம், தனியார் நிகழ்வில் மீதமாகும் உபரி உணவை ஆதரவற்ற மக்களுக்கு கொண்டுச் செல்ல தன்னார்வ ஆர்வலர்களின் உதவியுடன் அரசு கைகோர்த்து செயல்படுத்த உள்ளோம் எனவும், அதற்கான வாகனத்தை இன்று தொடங்கி வைத்தாகவும் தெரிவித்தார்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணென் விஷம் எனவும், அந்த எண்ணெய் மீண்டும் உபயோகிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் கொள்முதல் செய்து பயோ-டீசல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதே போன்று கின்னஸ் சாதனை முயற்சிக்காக கோவையில் 550 டன் அளவிலான ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசல் மாற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும், ஏற்கனவே பிரேசில் நாட்டில் 500 டன் எண்ணெய்யை கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.
அரசுமருத்துவமனையில் எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க தனிப்பிரிவு 1.5 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இதுவரைக்கும் 5 மெகா தடுப்பூசி மூகாமில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு 5 நாளில் மட்டும் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் 93% பேர் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 37% சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவையில்மண்டலம் வாரியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாகனங்கள் இன்று தொடங்கி வைத்துள்ளோம் எனவும் 5 மண்டலத்திற்கு 5 வாகனம் ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். 2 வயது முதல் 18 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவு அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு பணிகளை தொடங்கி விடுவோம் எனவும், பண்டிகைகாலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும் தெரிவித்தார். மேலும் மருத்துவப்படிப்பிற்கான கூடுதல் இடங்கள் மத்திய அரசு நிபுணர் குழு ஆய்விற்கு பிறகு கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu