கோவையில் மாத இதழை எரித்து உதயநிதி மன்றத்தினர் போராட்டம்

கோவையில் மாத இதழை  எரித்து உதயநிதி மன்றத்தினர் போராட்டம்
X

கோவையில் உதயநிதி மன்றத்தினர் மாத இதழை எரித்து போராட்டம் நடத்தினர்.

Protest News -கோவையில் மாத இதழை எரித்து உதயநிதி மன்றத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

Protest News -மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருடன் முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் உள்ள புகைப்படத்துடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை, அழுத்தத்தில் ஆசிரியர்கள், அந்தரத்தில் பயிற்சி மையம்,அமைச்சர் பெயில்,என பல்வேறு தலைப்புகளில் அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளதாக கோவை மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளேட்டினை எரித்து இதற்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த நாளேடுகள் கடைகளில் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் பாபு,மாவட்ட பொறுப்பாளர் ராகுல்ராம்,செல்வம், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு