கோவையில் கனமழை: மரம் விழுந்து 4 இருசக்கர வாகனங்கள் சேதம்

கோவையில் கனமழை: மரம் விழுந்து 4 இருசக்கர வாகனங்கள் சேதம்

இரு சக்கர வாகனத்தை மீட்கும் தீயணைப்பு துறையினர்.

கோட்டைமேடு பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேறுடன் சாய்ந்து விழுந்தது.

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு கோவை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் மழை காரணமாக கோட்டைமேடு பகுதியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேறுடன் சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. மழை காரணமாக அப்பகுதி மக்கள் வெளியே வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

அதேபோல் சாலையில் விழுந்த மரம் சற்று பின்னோக்கி விழுந்து இருந்தால், குடியிருக்கும் வீடுகளின் மீது விழுந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். பெரும் சத்தத்துடன் மரம் விழுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்ததாக தெரிவித்தனர். மேலும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புதுறையினர். ராட்சத இயந்திரங்களை கொண்டு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 50 வருட பழமையான மரம் விழுந்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story