கோவையில் இன்று 112 பேருக்கு கொரோனா தொற்று: உயிரிழப்புகள் இல்லை
கொரோனா பரிசோதனை.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பில் தொடர்ந்து கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேசமயம் கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் இன்று 112 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 142 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2461 ஆக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu