கோவையில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று: உயிரிழப்புகள் இல்லை

கோவையில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று: உயிரிழப்புகள் இல்லை
X

கொரோனா பரிசோதனை

நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 101 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 51 ஆயிரத்த 704 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 56 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2488ஆக உள்ளது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு