கோவை உக்கடத்தில் கோவிலில் தங்கக்காசு திருடிய மூவர் கைது

கோவை உக்கடத்தில் கோவிலில் தங்கக்காசு திருடிய மூவர் கைது
X
கோவையில், கோவிலில் இருந்து வெள்ளி வாள், தங்கக்காசுகள் உள்ளிட்டவற்றை திருடிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை உக்கடம் அருகேயுள்ள மதுரை வீரன் கோவிலில், கடந்த 22ம் தேதி இரவு, நள்ளிரவில் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த சுவாமியின் வாள் மற்றும் 4 தங்கக்காசுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவிலில் திருடிய நவீன், விக்கி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாள் மற்றும் 4 கிராம் தங்கக்காசுகளை மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் கடைகளில் விலையுயர்ந்த வயர்களையும் திருடியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி