கழுத்தில் மாலையுடன் காதல் ஜோடி போலீஸ் ஐ.ஜி அலுவலகத்தில் தஞ்சம்
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீன்குமார் நதியா ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). மர வேலைப்பாடுகள் செய்யும் பிரவீன்குமாரும் ஓசூரை அடுத்த சாமனப்பள்ளி பகுதியை சேர்ந்த நதியா(19)-வும் சிறுவயது முதலே நண்பர்கள். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக 12ஆம் வகுப்பை நிறைவு செய்த நதியாவை மேல்படிப்பிற்கு அனுப்பாத பெற்றோர்கள் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று கோவை வந்தடைந்தனர்.
இருவரும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் முன்னிலையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்த மாலையுடன் கோவை பந்தயச்சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் மாற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் தங்களது பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu