கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
கோவை புத்தகத் திருவிழாவின் 8வது பதிப்பு ஜூலை 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையினை(logo) கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஒரு பகுதியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை கொண்டு ஒரே இடத்தில் திருக்குறளை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த புத்தக கண்காட்சியை அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்து காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த லோகோ உருவாக்குவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் இடம் இருந்து 484 வடிவமைப்பு வரப்பெற்ற நிலையில் தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றும் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சில்வஸ்டர் வடிவமைத்த லோகோ தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu