/* */

சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
X

திமுக போராட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். இதனை திமுகவினர் ஏற்க மறுத்ததால், காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது திமுகவினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சீமான் தொடர்ந்து திமுக குறித்து அவதூறாக பேசுவதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய திமுகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 Dec 2021 3:00 PM GMT

Related News