பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
X
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
By - V.Prasanth Reporter |7 Jan 2022 4:30 PM IST
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்.
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை, வார விடுமுறை மற்றும் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் 26 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பு சுரண்டல் தடுத்து நிறுத்த வேண்டும் தொழிலாளர் நல சட்டங்களில் இருந்து டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu