கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை

கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை
X
தனியார் நீட் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்த வடவள்ளியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்

கோவையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை

வடவள்ளியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார், தனியார் நீட் பயிற்சி மையத்தில் 5 மாத காலம் தங்கி பயிற்சி பெற்று வந்தார் ஸ்வேதா.

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சுவேதா வயது 19. இவர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மெடிக்கல் அகாடமியில் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவேதாவுக்கு அதே பயிற்சி மையத்தில் படித்த மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் தற்போது படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள் இது எல்லாம் சரிவராது என கூறினர். ஆனாலும் 2 பேரும் தங்களது காதலை தொடர்ந்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவரின் பெற்றோர் மதுரையில் இருந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது மகனை அவர்களுடன் அழைத்து சென்றனர். தனது காதலனை அவரது பெற்றோர் அழைத்து சென்றதால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் சுவேதா இருந்துள்ளார்.

சம்பவத்தன்று தனது உடல்நிலை சரியில்லை என கூறி வகுப்புக்கு செல்லாமல் அறையில் தனியாக இருந்துள்ளார். காதலனை பெற்றோர் அழைத்து சென்றதால் விரக்தி அடைந்த மாணவி பயிற்சி மையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் வகுப்பு முடிந்து அறைக்கு திரும்பிய சக மாணவிகள் சுவேதா தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கோவில்பளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அறையில் சுவேதா வைத்து இருந்த 50-க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
ai solutions for small business