கோயம்புத்தூரில் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

கோயம்புத்தூரில் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
X

. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளியபடி சென்று காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இரத்தனபுரி பகுதியில் மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளிபடி சென்று, காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாஜக வெற்றி பெற்றால் மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதேபோல மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!