/* */

முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் சாமிநாதன்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.

HIGHLIGHTS

முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் சாமிநாதன்
X

அமைச்சர் சாமிநாதன் பேட்டியளித்த போது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கை செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திறந்து வைத்தார். பின்னர் பேரிடர் இன்னல் குறைப்பு தின நிகழ்வினை துவக்கி வைத்து, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நேரில் பார்வையிட்டார். இதையடுத்து செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்ற உத்தரவுப்படி போலி பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட இருக்கின்றது. 90 நாட்களுக்குள் குழு அமைக்க உத்திரவிடப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றி. பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உரிய முறையில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்க இருக்கும் தனிநபர் ஆணையத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தனி நபர் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 90 நாட்களுக்குள் ஆணையம் அமைக்க உத்திரவிடப்பட்டு இருக்கும் நிலையில், 40 நாட்கள் மட்டுமே முடிந்து இருக்கின்றது. ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

Updated On: 13 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்