Students Conditional Bail கோவை தனியார் கல்லுாரி ராகிங்கில் கைதான 7 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

Students Conditional Bail
தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளிலோ அல்லது பள்ளிகளிலோ ராகிங்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஒருசில கல்லுாரிகளில் இது தொடரத்தான் செய்கிறது. ஆனால் வெளியில் தெரிவதில்லை. இந்நிலையில் கோவை தனியார் பொறியியல் கல்லுாரியில் ஒரு மாணவனை ராகிங்செய்ததாக 7 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை தனியார் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவரை ராகிங் செய்த வழக்கில் கைதான மாணவர்கள் 7 பேருக்குநிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அவிநாசி ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொழில்நுட்பக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த 18 வயதுடைய திருப்பூர் மாணவரை சீனியர் மாணவர்கள் 7 பேர் மொட்டையடித்து ராகிங் செய்து கொடுமைப்படுத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவன் பெற்றோர்களுக்குஇதுகுறித்து தகவல் தந்ததால் அவர்கள் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் 7 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோவை 2 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Students Conditional Bail
சிறையில் அடைக்கப்பட்ட 7 மாணவர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோவை 2 வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்ராஜா, கைதான 7 மாணவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த மாணவர்கள் அவர்களின் சொந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தினந்தோறும் சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu