அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார்

அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார்
X

புகாரளிக்க வந்த இந்திய மாணவர் சங்கத்தினர்.

மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக ரகுநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியர் ரகுநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து பேட்டி அளித்த அவ்வமைப்பினர், பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இது குறித்த ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். பேராசிரியர் ரகுநாதனை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், இது குறித்து மாணவிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!