கோவை அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியரை மாற்றக்கோரி போராட்டம்

கோவை அரசு கலைக் கல்லூரியில்  உதவி பேராசிரியரை மாற்றக்கோரி போராட்டம்
X

கோவை அரசு கல்லூரி உதவி பேராசிரியரை மாற்றக்கோரி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியரை மாற்றக்கோரி மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாத்திமா. இந்த புவியியல் துறையில் 350க்கும் மேற்பட்டோர் பயின்று வரும் நிலையில் உதவிப் பேராசிரியர் பாத்திமா கடந்த 6 மாதமாக கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் சரிவர பாடங்கள் நடத்தாதன் காரணமாக தங்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளதாக மாணவ மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளதோடு உதவிப் பேராசிரியரை உடனடியாக மாற்ற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி உதவிபேராசிரியைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மாணவிகள் கூறும்போது, கடந்த ஆறு மாதங்களாக சரிவர துறை உதவி பேராசிரியர் பாத்திமா கல்லூரிக்கு வரவில்லை எனவும் சரிவர பாடங்கள் நடத்தாதன் காரணமாக தங்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகி உள்ளதாகவும், வரும் ஜூன் 24ஆம் தேதி செமஸ்டர் தேர்வு நடக்க உள்ள நிலையில் விரைந்து உதவிப் பேராசிரியரை மாற்றி புதிய பேராசிரியரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!