பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க கோரி போராட்டம்: தபெதிக அறிவிப்பு

பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க கோரி போராட்டம்: தபெதிக அறிவிப்பு
X

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முதற்கட்டமாக வரும் 27ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான ரயில்வே அகல பாதையை முழுமையாக பயன்படுத்தி தென்மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து ரயில்களை இயக்காமல் கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாக கூறி ரயில்வே துறையை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முதற்கட்டமாக வரும் 27ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறியதாவது:

கோவை- திண்டுக்கல் ரயில் பாதை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட நிலையிலும் மத்திய அரசு கோவை பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க மறுக்கிறது. தற்போது கொண்டு வந்துள்ள திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க மறுத்து பாலக்காடு - திருச்செந்தூர் என்று அறிவித்திருப்பது, கோவை மக்களை வஞ்சிக்கும் செயல்.

எனவே இதனை கண்டிக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு ரயிலை இயக்க வேண்டும். திருச்செந்தூர் ரயிலை கோவை வழியாக இயக்க வேண்டும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பாதைகளை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 27ம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் முதல்கட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!