/* */

தேவாலயதில் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம்

புனித செபாஸ்டியன் சிலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

தேவாலயதில் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம்
X

கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்.

கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி் பேசும் கிறுஸ்துவ மக்கள் வழிபடும் டிரினிட்டி ஹோலி தேவாயலம் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கு கடைபிடிக்கபட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணபட்ட நிலையில், தேவாலயத்தில் செக்யூரிட்டி ஜான்சன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரவு 10 மணி அளவில் தேவலாயத்தின் வளாகத்தில் கண்ணாடி உடைத்த மர்ம நபர்கள் கண்ணாடியை கட்டையால் அடுத்து உடைத்ததுடன் உள்ளே இருந்த புனித செபாஸ்டியன் சிலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சத்தம் கேட்டு ஜான்சன் சென்று பார்த்தபோது தலைகவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் தேவாலயத்தில் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்த புனித செபாஸ்டியரின் சிலையை கட்டையால் உடைத்து கொண்டிருந்த்தை பார்த்து அதிர்ச்சியடைத்து கூச்சலிட்டுள்ளார். ஜான்சனின் சத்தம் கேட்டு பாதிரியார் வருவதற்குள் அந்த மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் தயாரக இருந்த மற்றொரு நபரும் ஏறி தப்பினார். இதில் செபாஸ்டியர் சிலை மற்றும் அதனைச்சுற்றி வைக்கபட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு சிலையை உடைத்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அத்தேவாலயத்தின் கிறித்தவ மக்கள் அமைதி வழியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவையில் வசிக்கும் கிறித்துவ சிறுபான்மையினர் வழிபடும் தேவாலயத்தில் சிலை உடைக்கபட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற சட்ட விரோத செயலின் மூலம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பிரச்சனையை துண்டும் விதமாகவும் செயல்பட்ட மர்ம நபர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Updated On: 25 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க