குட்கா பொருட்கள் விற்பனையில் போலீசாருக்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்.
Coimbatore News Today in Tamil - கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் குட்கா பொருட்களை தடை செய்வதற்காக நேற்று 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளிகள் அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 23 பேரை கைது செய்துள்ளனர் என்றும், 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது போன்று விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இது போன்று விற்பனை எங்காவது நடைபெற்றால் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் படி கேட்டுகொண்டார். மேலும் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்களை அழைத்து இது பற்றிய விழிப்புணர்வை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். பள்ளி அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போக்சோ தடுப்பு சட்டம் குறித்தும் எடுத்து கூறியதாக தெரிவித்தார். குட்கா விற்பனையில் காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் ஒரு வார காலத்தில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இரு சக்கர வாகன திருட்டு குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுநர்கள் கணக்கெடுப்பு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தனியார் பேருந்து ஊழியர்கள் ரகளையில் ஈடுபடுவதாக சில செய்திகள் வந்துள்ளது என்றும், இரவு நேரத்தில் ரோந்து பணிகளை தீவிரப்ப்டுத்த உள்ள்தாகவும் கூறினார்.
காந்திபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற சம்பவத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தெரிவித்தார். தனியார் பேருந்துகளில் அதிகளவு ஊழியர்கள் இருப்பதாக தெரிவித்தற்கு பதிலளித்த அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த காவல்துறை தரப்பில் இருந்து போதிய உதவிகள் செய்வதாகவும் அப்படியிருக்க சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டால் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu