கோவையில் தேவாலயத்தில் செபஸ்தியார் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதம்

கோவையில் தேவாலயத்தில் செபஸ்தியார் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதம்
X

சேதம் படுத்தப்பட்ட சிலை

கோவையில் உள்ள தேவலாயத்தில் உள்ள செபஸ்தியார் சிலையை கட்டை அடித்து சேதப்படுத்தி தப்பியோடிய மர்ம நபர்கள்

கோவை இராமநாதபுரம் பகுதியில் ஹோலி டிரினிட்டி கதீட்ரல் என்ற தேவலாயம் செயல்பட்டு வருகிறது. தேவலாயத்தின் நுழைவாயில் அருகே புனித செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு பத்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர். அப்போது ஒருவர் நுழைவாயில் கதவின் மீது ஏறி தேவலாயத்திற்குள் உள்ளே நுழைந்து, செபஸ்தியார் சிலையை கட்டையால் சேதப்படுத்தியுள்ளார். சிலையை சேதப்படுத்தும் சத்தம் கேட்டு வந்த தேவாலய காவலாளி ஜான்சன் என்பவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்நபர் நுழைவாயில் கதவை தாண்டி குதித்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து காவலாளி ஜான்சன் தேவாலய நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உதவி மத போதகர் பாஸ்டின் ஜோசப், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிலையை சேதப்படுத்திய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செபஸ்தியார் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவாலய நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers