பெட்ரோல்-டீசல் விலையை மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும்: வானதி சீனிவாசன்
மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைத்து தங்களது வரிவருவாயை குறைத்தது போல் ,மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும்.மக்களுக்காக தங்களது வரிவருவாயை மத்திய அரசு குறைத்து போல் ,மாநில அரசும் மக்களுக்காக வரிவருவாயை குறைத்து கொள்வதில் தவறில்லை.
மேலும் தமிழக அரசு பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாத பிடித்து வருவதாக தெரிவித்த வானதி சீனிவாசன் ,மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாமுமில்லை.அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்திற்க்காக கூட்டாட்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரசாரம் செய்யக்கூடாது. தனிப்பட்ட ஆதயத்திற்காக மோடி அரசை எதிர்ப்பது தவறு.
கொரோனாவல் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கு நிதியை,மத்திய அரசு வழங்கி வருகிறது.சென்னையில் பாஜக பிரமுக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ,தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளதை காட்டுகிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருகிறது.
திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். ,ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஊடகங்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்கிற போக்கு தற்போது திமுக விற்கு வந்துள்ளது.ஏன் திமுக விற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர் என்றார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu