இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்தது: அண்ணாமலை

இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்தது: அண்ணாமலை
X

செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை.

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கையில் இன்று நிலைமை மோசமாக இருப்பதாகவும், இலங்கைக்கு பக்கத்துக்கு நாடு என்கிற அடிப்படையிலும் ,தமிழக மக்களின் நலன் கருதியும் நாம் உதவி செய்கிறோம் என தெரிவித்தார்.

இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் எனக் கூறிய அவர், இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் இந்தியா வரமுடியவில்லை எனவும், கொழும்பிலிருந்து , ஜவ்னாவிற்க்கு நிதி உதவி அளித்து ரயில் மூலம், விமான நிலையத்திற்கு வரவழைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும்,

அங்கு தமிழகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது, ஆனால் தீர்வே இல்லாமல், இங்குள்ளவர்கள் கத்தி கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். இலங்கைக்கு டீசல், பெட்ரோல், உணவு பொருட்கள், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளோம் எனவும், இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்த அவர், இலங்கையில் 14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்றும் தெரிவித்தார். யாழ்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சீனா இந்தியாவிற்கு உதவுவது இலங்கை மக்களின் இரத்தத்தைக் உறிஞ்சுவதற்கு எனவும் தெரிவித்தார்.

வடகிழக்கு பகுதியில் 46000 வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளது எனவும், மலையக பகுதி மக்களுக்காக 16000 வீடுகள் கட்டித் தந்துள்ளோம் எனவும் தெரிவித்த அவர், இலங்கை கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இலங்கை, இந்தியாவிடம் கேட்பது நியாமில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது. மொழியை திணித்தால் நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்தார். செய்திக்காக கருத்து சொல்வபவர்களுக்கு நான் எப்படி கருத்து சொல்வது என தருமபுரி எம்.பி.செந்தில் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர்,பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் என தெரிவித்தார்.

காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் என தெரிவித்த அவர், எல்.ஐ.சி இன்னும் அரசு நிறுவனம் தான் என தெரிவித்தார். இழப்பை சந்திக்கின்ற நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்கிறோம் எனக்கூறிய அவர், நானும் ராஜா என்று கூறி,தமிழக முதல்வர் இப்போது தான் துபாய்க்கு போய்விட்டு வந்தார்.தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய விக்கிரமராஜா, தேர்தலுக்கு முன் மால்கள் ஏதும் தமிழகத்தில் வர அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னார். ஆனால் லூலு மால் வருவதற்கு காரணமானவரை விக்கிரமராஜா புகழந்து தள்ளுகிறார்.

திருமாவளவனை விவாதத்துக்கு கூப்பிட்டேன், அப்போது அந்த கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, நான் விவாதத்துக்கு வருகிறேன் என்றார். ஆனால் திருமாவளவன் அங்கு யாரும் செல்லாதிர்கள் என்று சொல்லிவிட்டார். நான் மூன்று புத்தகம் அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அங்கிருந்து ஏதும் வரவில்லை. விவாதத்திற்க்கும் வரவில்லை என தெரிவித்தார்.

மீண்டும் பிரஷாந்த் கிஷோர் தமிழகத்திற்கு வந்து, திமுகவிடம் மீண்டும் ஓப்பந்தம் போட்டு கட்சியை வளர்பார் எனக்கூறிய அவர், தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த முடியாது என்பது தேர்தலுக்கு முன்பு தெரியாதா ? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்காக கவர்சியான திட்டங்களை கொண்டு வந்து பொய் சொல்லி வாக்கு வாங்கி விட்டு, இப்போது நிலைப்பாடை மாற்றுகிறார்கள்.

ஆறு மாதத்திற்க்கு முன்னே கோவையில் லூலு மால் வருவதற்கு ஆயுத்த பணிகளை மேற்கொண்டு பணிகளை செய்ய துவங்கிவிட்டார்கள் என தெரிவித்தார். ஆனால் லூலு மால் வருவதற்கு ஒப்பந்தம் இப்போது போட்டதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்த அவர், மின் தட்டுபாடு எதனால் என்று அமைச்சரிடம் கேட்டால் நிலக்கிரி தட்டுபாடு என்கிறார்கள்.

தமிழகத்தில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படிதான் பேசுவார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!