/* */

கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை என புகார்.

HIGHLIGHTS

கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

கர்ப்பிணி வேடமணிந்து வந்த பெரியார் மணி

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பெரியார் மணி என்பவர் நைட்டி அணிந்த படி வயிற்றில் பஞ்சை வைத்து கட்டி கர்ப்பிணி பெண் போன்று வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகப்பேறு திட்டம் மூலம் நிதி உதவியும், அதேபோல் ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிதியுதவியும் ஊட்டச்சத்துக்களும் பல மாதங்களாக தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். எனவே உடனடியாக இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று கூறி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Updated On: 13 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு