சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நிறுவனம்- பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு.
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி விட்டதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட வர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: செய்திதாள்களில் வெளியான இந்தநிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அந்நிறுவனத்தில் தொடர்பு கொண்டதாகவும் சிங்கப்பூரில் பல்வேறு இன்ஜினியரிங் வேலை, வாகன ஓட்டுநர், அட்மின் வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முன் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் விமான பயண சீட்டுகளையும் வழங்கிவிட்டு, கடந்த 8ம் தேதி வாகனம் வந்து பிக்கப் செய்து கொண்டு சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்த பிறகு சிங்கப்பூர் அழைத்து செல்வோம் எனக் கூறினர். ஆனால், 8ம் தேதி மதியம் வரை வாகனம் எதுவும் தங்களை பிக்கப் செய்ய வரவில்லை. அந்நிறுவனத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டபோதும் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிலர் நேரடியாக அங்கு சென்று பார்க்கும் பொழுது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததும், தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாகவும் கூறினர்.
மேலும் அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து மூன்று கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்ததாகவும். இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu