கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
X

பேராசிரியர் ரகுநாதன்.

மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஸ்னஸ் அட்மினிஸ்டிரேசன் பிரிவின் துறைத்தலைவராக பணியாற்றி வருபவர் துணை பேராசிரியர் ரகுநாதன். இவர் அப்பிரிவில் பயிலும் மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்புவதாகவும், மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வரிடம் எழுத்து பூர்வமாக புகார் மனுவை அளித்துள்ளார். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். பேராசிரியர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே பேராசிரியர் ரகுநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்‌. விசாரணைக்கு பின்னர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேராசிரியர் ரகுநாதனை கைது செய்தனர். மேலும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!