கோவை விமான நிலையத்தில் கேரள காங்கிரஸ் பிரமுகரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் கேரள காங்கிரஸ் பிரமுகரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்
X

காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.பி.ஏ தங்கல் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுகள்.

உண்மைகளை சோதனையிட்ட போது ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது‌.

கேரள மாநிலம் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல். 60 வயதான இவர், கேரள காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் தங்கல் கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல கோவை விமான நிலையம் வந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளை சோதனையிட்ட போது, அவரது கைப்பையில் ஒரு கைத் துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைத் துப்பாக்கி பயன்படுத்தும் நிலையில் இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து தங்கலிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்தபோது, சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் தங்கலிடம் இல்லாததால் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!