/* */

குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் தீவிரம்...!

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்புக்காக பள்ளிக்கூடம் திட்டத்தை அமல்படுத்துவதில், கோவை மாவட்ட காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

HIGHLIGHTS

குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் தீவிரம்...!
X

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன்.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியதாவது: பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அவர்களை தயார்படுத்துவது தான் 'புராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு கூட்டம் நடத்தப்படும். அவர்களுக்கு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள், குழந்தை நல அலுவலர்கள் பயிற்சி அளிப்பர்.

குழந்தைகளுக்கான பிரச்னைகள் என்ன, பாலியல் தொல்லை நடப்பது தெரிந்தால் எப்படி காவல்துறையினரிடம் அணுகி தீர்வு காண்பது என்று ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். அடுத்த கட்டமாக, மாவட்டத்தில் செயல்படும் 997 பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.

முதலில், 10 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு அடிப்படையான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். குட் டச், பேட் டச் குறித்து புரிதல் ஏற்படுத்தப்படும். 10 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு, இணையத்தின் நன்மை, தீமைகள் விளக்கம் அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அடிப்படையில், ஹாட் ஸ்பாட் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதி பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து விழிப்புணர்வு பயிற்சி தரப்படும். இவ்வாறு, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குறிப்பிட்டார்.

இதையடுத்து, பள்ளி குழந்தைகளை காக்கும் பள்ளிக்கூடம் திட்டத்தை கோவை மாவட்டத்தில் அமல்படுத்துவதில் காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Jun 2022 10:59 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
 2. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 3. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 4. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 5. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 6. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 7. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
 8. லைஃப்ஸ்டைல்
  முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
 9. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 10. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்