ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது: தமிழ் புலிகள் போராட்டம்

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது:  தமிழ் புலிகள் போராட்டம்
X

தமிழ் புலிகள் சார்பில் நடைபெற்ற போராட்டம்.

ராஜவீதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகையிட வந்தனர்.

கோவையில் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என, ராஜவீதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகையிட வந்தனர். அப்போது திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் ராஜவீதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ராவணன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்களில் பயங்கரவாதத்தை போதிக்கும் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு நடத்தினால் மீண்டும் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடக்கும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
jobs ai will replace