வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் திட்டங்களை உடனடியாக வழங்க கோரிக்கை

வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் திட்டங்களை உடனடியாக வழங்க கோரிக்கை
X

ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் செய்தியாளர் சந்திப்பு 

டிடிசிபி அப்ரூவல் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு திடீரென தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹென்றி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிசிபி அப்ரூவல் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு திடீரென தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், அபிவிருத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மனைகளை பத்திர பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வீட்டு மனைகளில் வீடுகளை கட்டுவதிலும் பிரச்னைகள் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

2016ம் ஆண்டிற்கு முன்பே பதிவு பெற்று, 2017ம் ஆண்டிற்கு பிறகு பணம் கட்டி மனைகளை சமீபத்தில் வாங்கியவர்களும், இந்த தடை காரணமாக பிறருக்கு மனைகளை விற்கமுடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், வங்கி கடன் பெற்று வீடு கட்ட ஒப்படை செய்வதிலும் சிக்கல்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இப்பிரச்னைகள் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுவதோடு, பல லட்சம் ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு உடனடியாக இவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டிய நிலைக்கு ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!