தற்காலிகமாக மூடப்பட்ட கோவை-திருச்சி மேம்பாலம் மீண்டும் திறப்பு
தற்காலிகமாக மூடப்பட்ட கோவை-திருச்சி மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது
கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது.இந்த மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்க முன்பு வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.அதன் பின்னர் மேம்பலத்தில் விபத்து நடக்காமல் தடுக்க, பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது.
தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. மேம்பாலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும்.கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் மேம்பாலத்தின் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் எதிர்திசையில் வாகனங்களில் செல்ல கூடாது. பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வலைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவுப்பு பலகைகள் வைக்கப்பட்டது.
மேலும் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பலத்தில் 10 இடங்களில் வேக தடைகள் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து மூடப்பட்டு இருந்து பாலம் இன்று திறக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu