ராமநாதபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் திடீர் மயக்கம்
மாணவிகளை பரிசோதனை செய்த மருத்துவ குழு.
School News in Tamil -கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேருக்கு காலையில் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து மேலும் ஏழு மாணவிகளுக்கு காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சக மாணவிகளிடம் இது ஒரு விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் , மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக பள்ளியில் மூன்று மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளியில் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மாணவிகளுக்கு மயக்கம், உடல் சோர்வு காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட ஒரே உணவை பகிர்ந்து கொண்டதனாலா, அல்லது ஒரே குடிநீரை பருகினரா என்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தீரண 9 மாணவிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டது தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து பெற்றோர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu