ரம்ஜான் ஈகை பெருநாள்...!ரஷ்யா,உக்ரைன் மக்களுக்கு சிறப்பு தொழுகை....!
ரம்ஜான் ஈகை பெருநாள்...!ரஷ்யா,உக்ரைன் மக்களுக்கு சிறப்பு தொழுகை....!
ரஷ்யா,உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி நலம்பெற வேண்டும் என கோவையில் ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியகள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புனித ரமலான் தினமான இன்று கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர்அலி தீப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசலில் ரம்ஜான் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டது. ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெரியவர்கள் கலந்து கொண்ட இதில் ரஷ்யா,உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி நலம்பெற வேண்டும் எனவும் தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu