கோடை மழையால் குளிர்ந்தது கோவை: மகிழ்ச்சியில் மக்கள்

கோவை நகரில் பரவலாக மழை பெய்தது.
கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அன்றாடம் பயணிப்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு வந்தது. இது குறித்து நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என கூறியிருந்தனர்.
அதன்படி, இன்று காலை முதலே மேக மூட்டமாகவும் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் திடீரென கோவை காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், உக்கடம், கணபதி, குனியமுத்தூர், சிங்காநல்லூர், அவினாசி ரோடு, வடவள்ளி, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சரவணம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கோடை மழை பெய்துள்ளது. கோடை வெப்பம் கோவையை வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu