கோவையிலிருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் சேவை தொடக்கம்

கோவையிலிருந்து ஷீரடிக்கு தனியார்  ரயில் சேவை தொடக்கம்

கோவையிலிருந்து ஷீரடிக்கு சிறப்பு ரயில் இன்று துவங்கியது

Private train service from Coimbatore to Shirdi

கோவையிலிருந்து ஷீரடிக்கு சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி ரயில் போக்குவரத்து இயக்க வசதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஷீரடிக்கு ஐந்து நகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு, பிரதமர் மோடியின் 'பாரத் கவுரவ்' என்ற திட்டத்தின் கீழ், ரயில்வே துறை அனுமதி அளித்தது. இதில், கோவையும் இடம் பெற்றுள்ளது.

கோவையிலிருந்து ஷீரடிக்கும், ஷீரடியிலிருந்து கோவைக்கும் வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது. ஆந்திரா மாநிலம், மந்த்ராலயா வழியாகச் செல்வதால், அங்கு செல்லும் பக்தர்கள் இரண்டு கோவில்களுக்கும் செல்ல உதவியாக இருக்கும். இந்த ரயில் முதல் முறையாக தனியாரால் இயக்கப்படவுள்ளது. மிகவும் துாய்மையாகவும், சர்வதேச தரத்திலான விருந்தோம்பலுடனும், இந்த ரயிலின் சேவை அமையுமென்று, ரயில்வே அதிகாரிகள் தகவல் வாயிலாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து கடந்த வாரம் முதல் ரயிலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. கோவையில், ஐந்து, திருப்பூர், ஈரோட்டில், தலா ஒரு இடத்திலும் டிக்கெட் கிடைக்கிறது. இதுதவிர, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூரில் உள்ள அனைத்து சாய்பாபா கோவில்களிலும், டிக்கெட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு ரயில் சேவையும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி தந்திருக்கின்றனர். அதனடிப்படையில் கோவை - சீரடி தனியார் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. வட கோவை ரயில் நிலையத்தில் மாலை ஆறு மணிக்கு பயணிகளுடன் இரயில் புறப்படுகின்றது.ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு பிரதமர் மோடியின் 'பாரத் கௌரவ்' என்ற திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அனுமதி அளித்ததன் அடிப்படையில் கோவையிலிருந்தும் இரயில் இயக்கப்படுகின்றன.மேலும் முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது.

ரயில் மஞ்சள் , நீலம் நிறங்களில் வண்ணம் பூசியிருக்கின்றனர். இரயில் பெட்டியின் உட்பகுதியில் பேப்பர்கள் ஒட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.தனியாரின் கீழ் சீரடிக்கு முதல் சேவை இன்று ஆர்ம்பவாதனால் ரயில் புது பொழிவுடன் உள்ளது என்றும் கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு வழக்கமாக ஸ்லீப்பர் கட்டணம் 1,280 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தனியார் நிறுவனம் 2500 ரூபாய் வசூலிக்கிறது.

மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 2,360 ரூபாயாக உள்ள நிலையில் தனியார் கட்டணம் 5000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது.குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய் ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 8,190 ரூபாயாக உள்ள நிலையில் தனியார் கட்டணம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கபட்டு ரயில் இயங்குகிறது.அதிக கட்டண நிர்ணயம் எளியோருக்கு ரயில் சேவை எட்டாக் கனியாக மாறியிருக்கின்றது.

Tags

Next Story