மாணவர் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு பள்ளியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு

மாணவர் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு பள்ளியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு

மாதிரி வாக்காளர் பட்டியல்.

மாணவர் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு கோவை பள்ளியில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில், தேர்தல் விதிமுறைகள் தேர்தல் நடத்தும் வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் முறைகள், பிரச்சாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பள்ளிக்கான 5(மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டு துறை, உணவுத்துறை, சுற்று சூழல்துறை) துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடைபெறும் முறை போலவே மாணவர்களுக்கு பூத் சிலிப்(மாதிரி) வழங்கப்பட்டு, விரலில் மை இட்டு, கணினி மூலம் வாக்கு பதிவு நடத்தப்படுகிறது. இதில் பள்ளி 5ம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இந்த தேர்தலில், அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்களித்தனர்.

கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்கள் தேர்தல் முறைகள் பற்றி இந்த சிறுவயதிலேயே அறிந்து கொள்ளும் வண்ணம் இது போன்று தேர்தல் நடத்தப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story