/* */

பொங்கல் பரிசு முறையாக வழங்கப்படுகிறதா? கோவை ஆட்சியர் சமீரன் ஆய்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

பொங்கல் பரிசு முறையாக வழங்கப்படுகிறதா? கோவை ஆட்சியர் சமீரன்  ஆய்வு
X

ரேசன் கடையில் ஆட்சியர் சமீரன் ஆய்வு.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் 10.78 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தெப்பக்குளம் வீதியில், ராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகசாலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அறிவித்த 21 பொருட்களும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறதா என்பதையும், பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களிடம், பொருட்களின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். தரமான பொருட்களை வழங்குவதோடு, அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் ஊழியர்களுக்கு அப்போது அறிவுறுத்தினார்.

Updated On: 10 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....