கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: மாணவி மற்றும் ஆசிரியர் வீடுகளில் போலீசார் சோதனை

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: மாணவி மற்றும் ஆசிரியர் வீடுகளில் போலீசார் சோதனை
X

மிதுன் சக்கரவர்த்தி

மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய காவல் துறையினர் மாணவியின் நோட்டு புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே 'யாரையும் சும்மா விடக்கூடாது' என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காததால் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மாணவி தற்கொலை குறித்து 4 தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்?, வேறு யாரேனும் தற்கொலைக்கு தூண்டுனார்களா? தற்கொலைக்கு வேறு எதேனும் காரணங்கள் இருக்கிறதா?உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய காவல் துறையினர் மாணவியின் நோட்டு புத்தகங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் லாலி சாலையில் உள்ள வீட்டிலும் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings