/* */

கோவை பூங்காவில் போலீஸார் திடீர் ஆய்வு: ஓட்டம் பிடித்த காதல் ஜோடிகள்

கோவை வஉசி பூங்காவில் காதல்ஜோடிகளின் சில்மிஷத்தை தடுக்க போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்

HIGHLIGHTS

கோவை  பூங்காவில்  போலீஸார் திடீர் ஆய்வு:  ஓட்டம் பிடித்த காதல் ஜோடிகள்
X

காட்டூர் போலீசார் வ.உ.சி பூங்காவிற்கு சென்று அங்கு மறைவான பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடிகளை பிடித்து விசாரித்தனர்

வ.உ.சி பூங்காவில் காதல் ஜோடிகளின் லீலைகள் குறித்து புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட தீடீர் ஆய்வின்போது அங்கிருந்த காதல் ஜோடிகள் ஓட்டம் பிடித்தனர்.

கோவை மத்திய பகுதியில் வ.உ.சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பொழுதை கழித்து வருகின்றனர். இதே போன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாலாங்குளம் மேம்படுத்தப் பட்டுள்ளது. இங்கு படகு இல்லம், மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோவை வ.உ.சி பூங்கா மற்றும் வாலங்குளத்தின் கரைப்பகுதியில் காதல் ஜோடிகள் வந்து அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தனர். இது அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.

புகாரை அடுத்து போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர். இதையடுத்து, காட்டூர் போலீசார் வ.உ.சி பூங்காவிற்கு சென்று அங்கு மறைவான பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடிகளை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்களை எச்சரித்து அனுப்பினர். வாலங்குளத்தில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ஆய்வு நடத்தி அங்கிருந்த காதல் ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பினர்.ஒரு சில காதல் ஜோடிகள் போலீசார் விசாரிப்பதை பார்த்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 20 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்