காளை மாடு கன்றுகளுடன் வந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

காளை மாடு கன்றுகளுடன் வந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு
X

கோவையில், மாட்டுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 

கோவையில், மாடு அருவை மனைகளில் கட்டணக்கொள்ளை நடப்பதாகக்கூறி, மாட்டுடன் வந்து இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கோவை சத்தி சாலை மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் மாடு அருவை மனைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் காளை மாடு மற்றும் கன்றுகளை வெட்ட இறைச்சி விற்பனையாளர்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அருவை மனைகளை ஏலம் எடுத்துள்ள அஸ்லம் அலி மற்றும் இப்ரஹீம் பாதுஷா ஆகிய இருவரும், விதிகளுக்கு முரணாக மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், கன்றுகளுக்கு 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும், இதற்கு உரிய ரசீதுகள் தருவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமிற்கு வந்த இறைச்சி விற்பனையாளர்கள் தங்களுடன் இரண்டு காளை கன்றுகளையும் அழைத்து வந்தனர். அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டிருந்ததால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் புகார் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திடீரென மாடு கன்றுகளுடன் மனு அளிக்க வந்தவர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி