உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்
கோவை 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும். நமக்கான பணி செய்யக் கூடியவர்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
கோவை தமிழக அரசியலின் மிக முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. அத்துமீறல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் வந்து பணம், கொலுசு போட்டு விட்டு வாக்கு கேட்கும் மோசமான சூழல் உள்ளது. இதனைத் தாண்டி நல்லவர்களுக்கும், தூய்மையானவர்களுக்கும் வாக்களிப்பது சவாலாக உள்ளது. வாக்காளர்கள், பிரச்சாரத்திற்கு சென்றவர்கள் மிரட்டப்படுகின்றனர். இதனைக் கண்டித்து போரட்டங்கள் நடந்தன.
கோவையின் மானப் பிரச்சனையாக இந்த தேர்தல் மாறியிருக்கிறது. மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள். ராமநாதபுரம் பகுதியில் ஒரு மண்டபத்திற்குள் ஹாட் பாக்ஸ் கொடுத்து வாக்கு கேட்டு வருகின்றனர். அத்துமீறல்களை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தனையும் தாண்டி ஜனநாயகம் பெற்றி பெற வேண்டும்.தேர்தல் நியாயமா நடக்கிறதா என்பது சந்தேகமகா உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் சரியான ஏற்பாட்டுடன் நடத்தவில்லை. வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தவில்லை" என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu