ஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்கள் 84 பேர் பணியிட மாற்றம்

ஒரே இடத்தில்  10 ஆண்டுகளாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்கள் 84 பேர் பணியிட மாற்றம்
X

மாவட்ட ஆட்சியர் சமீரன் (பைல் படம்)

Covai News Tamil -கோவை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்த ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

Covai News Tamil -கோவை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓரே இடத்தில் பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலாளர்கள் 84 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஒரே ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்கள் 84 பேரை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி, ஊரக அலகு மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்துள்ளது. மேலும்,பணி மாறுதல் தொடர்பாக எந்தவித கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது .

பணி மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்லக்கூடாது எனவும் மீறி விடுப்பில் செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். பணி மாறுதல் வழங்கப்பட்ட பணியிடத்தில் உடனடியாக பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!