கோவை அரசு மருத்துவமனையில் பிரதமர் நிதியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை துவக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் பிரதமர் நிதியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை துவக்கம்
X

ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை துவக்கி வைத்த எம்.பி. பி.ஆர்.நடராஜன்.

பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை மற்றும் காற்றழுத்தம் மாற்றம் உறிஞ்சி மானி ஆகியவை நிறுவப்பட்டுள்ளது. பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியிலிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. அதேபோல உறிஞ்சுமானி அலகும் நிறுவப்பட்டது. இவற்றின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவை தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!