கோவை மாநகராட்சியில் 15 பறக்கும் படைகள் அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சியில் 15 பறக்கும் படைகள் அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்
X

மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா.

தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சியில் தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 15,61,819 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் 1290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி தேர்தலில் 6192 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 1548 கண்ட்ரோல் யூனிட், 3612 வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தபட உள்ளதாக தெரிவித்தார். 0422-2300132 என்ற எண்ணுக்கு அழைத்து தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட 31ம் தேதி சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது.

கோவை மாநகராட்சியில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 85 ஆயிரம் செலவு செய்யலாம் என்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!