மருதமலை கோவிலில் வாகனங்களுக்கு 'நோ என்ட்ரி'

Marudhamalai Murugan Temple
X

Marudhamalai Murugan Temple

Marudhamalai Murugan Temple-மருதமலை முருகன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் டூவீலர், கார்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Marudhamalai Murugan Temple-கோவை, வடவள்ளியை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த செவ்வாய்கிழமை முதல், கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மருதமலை முருகன் கோவிலுக்கு செல்ல, அடிவாரத்தில் இருந்து மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, கோவில் வாகனங்கள் (பஸ்கள்) இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் செல்வதற்கு மட்டுமே, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை மருதமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவில் 4-ம் நாளான இன்று, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணியருக்கு மூல மந்திரம் யாகம் வளர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முன் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்க யானை வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் 30-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும் 31-ம் தேதி (திங்கட்கிழமை) காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை டூவீலர், கார்கள், ஜீப்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், கோவில் முன்பகுதி இடங்களை ஆக்கிரமித்து கொள்வதால் அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்களும் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். தவிர, கோவில் வாகனங்கள் இயக்கப்படும் மலைப்பாதை வழித்தடத்திலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

அனைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வாகனத்தில் மட்டும் மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என்று பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. கோவில் முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மட்டும் மலை கோவிலுக்கு வரும் பட்சத்தில் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவது குறித்து கோவில் நிர்வாகமும், வடவள்ளி போலீசார் சார்பிலும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மலைக்கோவிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே, கோவில் பஸ்கள் இயக்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, அதிக எண்ணிக்கையில், கோவில் பஸ்களை இயக்கி, பக்தர்களை அதிகளவில் கோவிலுக்கு சென்று திரும்பினால், அதிக நேரம் காத்திருக்க சிரமம் ஏற்படாது. குழந்தைகளுடன் குடும்பமாக வருபவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் மட்டுமே, கோவில் பஸ்களில் பயணித்து, மற்றவர்கள் படிக்கட்டுகளில் மலைக்கு சென்றுவரும் பட்சத்தில், பஸ்சுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Weight Loss Tips In Tamil